தமிழ்நாடு

விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இருவர் கைது!

விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இருவர் கைது!

webteam

சென்னை விமானநிலையத்திற்கு அருகே குண்டு வைக்கப்பட்டுள்ளதாக குடிபோதையில் மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பல்லாவரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குடிபோதையில் போன் செய்த இருவர், விமான நிலையம் எதிரே உள்ள திரிசூல மலையில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் வெடிகுண்டு வைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்லாவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் பொய்யானது என தெரியவந்துள்ளது. 

அழைப்பு வந்த கைப்பேசி எண்ணை வைத்து 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில், பல்லாவரம் சந்தைக்கு பொருட்களை விற்க வந்த அவர்கள், மது மற்றும் கஞ்சா போதையில் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, மிரட்டல் விடுத்த முஸ்தபா, பட்டாசு பாலு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்ற மூவரை விடுவித்தனர்.