தமிழ்நாடு

தமிழகத்தில் போயிங் நிறுவன முக்கிய விமான பாகங்கள் தயாரிக்க முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

Veeramani

தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்க அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சுந்தரம் அதனை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் 150 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த 24 மாதங்களில் ஓசூரில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் புதிய உற்பத்தி வசதியையும், தற்போது சேலத்தில் அமைந்திருக்கும் உற்பத்தி கூடத்தை 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக இந்நிகழ்ச்சி தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.