நேற்று மாலை 6 மணியளவில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த வாகனம் ஒன்று. இரண்டு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகங்கனம், மூன்று கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனால், 3 பேர் காயமடைந்தனர், 6 பேரின் வாகங்கள் சேதமாகின.
இதனையறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் விபத்தால் பாதிப்படைந்த வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இது பாபி சிம்ஹாக்கு சொந்தமான கார் என்று தெரியவந்தது. மேலும் இதை ஓட்டியது டிரைவர் புஷ்பராஜ் என்பதும் விசாரித்த போது தெரியவர, தான் மதுபோதையில் இருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து டிரைவர் புஷ்பராஜை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த பாபியின் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தெரிவித்த டிரைவர், மணப்பாக்கத்தில் உள்ள பாபி சிம்ஹாவின் வீட்டிலிருந்து அவருடைய தந்தையை சொகு காரில் அழைத்து வந்த அவர் சொன்ன இடத்தில் அவரை இறக்கிவைத்துவிட்டு மீண்டும் மணப்பாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். இந்தநிலையில்தான், கத்திபாராவில் இந்த விபத்து ஏற்பட்டது என்பதையும் தெரிவித்தார். இதனால், சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.