ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் நள்ளிரவில் பலத்த சூறாவளி வீசியதில் 20க்கும் அதிகமான விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன.
ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து ஏராளமான படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றன. கடலுக்குச் செல்லாத படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம். நேற்றும் வழக்கம் போல கடலுக்குச் சென்று வந்த படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிந்தன. நள்ளிரவில் திடிரென பலத்த சூறாவளி காற்று வீசியது. 2 மணி நேரம் நீடித்த சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தால் 20 விசைப்படகுகள், 8 நாட்டுப்படகுகள் சேதமடைந்துள்ளன. அதனால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
உடனடியாக ராமேஸ்வரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.