தமிழ்நாடு

மணப்பாடு அருகே படகு கவிழ்ந்து விபத்து.. 10பேர் உயிரிழப்பு

மணப்பாடு அருகே படகு கவிழ்ந்து விபத்து.. 10பேர் உயிரிழப்பு

Rasus

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே 20 பேருடன் கடலில் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மணப்பாடு. இங்கு உள்ள கடலுக்கு, மீனவர்களின் படகில் 20 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த 2 சிறுமிகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.