தமிழ்நாடு

ப்ளூவேல் விளையாட்டில் இருந்து மாணவி மீட்பு

ப்ளூவேல் விளையாட்டில் இருந்து மாணவி மீட்பு

webteam

ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட தஞ்சையைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காவல்துறையினர் மீட்டனர். 

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, அடிக்கடி வீட்டுச் சுவரில் மோதியதால் பெற்றோர் அச்சமடைந்தனர். பின்னர் மாணவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது நடந்த விசாரணையில் ப்ளூவேல் இணையதள விளையாட்டின் ஆரம்பக்கட்டத்தில் மாணவி இருந்தது தெரியவந்தது. யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று
போலீஸார் அறிவுறுத்தி வரும் வேலையில் மாணவர்கள் தொடர்ச்சியாக ப்ளூவேலுக்கு அடிமையாகி தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.