தமிழ்நாடு

ப்ளூவேல் பயங்கரம்: மாணவர் மீட்பு

ப்ளூவேல் பயங்கரம்: மாணவர் மீட்பு

webteam

திருச்சியை அடுத்த துறையூரில் ப்ளுவேல் விளையாடி டாஸ்க் என்ற பெயரில் மண்டையை உடைத்துக் கொண்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீட்கப்பட்டுள்ளார். 

ப்ளூவேல் விளையாட்டை துறையூர் நாகலாதபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் என்ற பாலிடெக்னிக் மாணவர் விளையாடியுள்ளார். டாஸ்க் என்ற பெயரில் மொட்டை மாடியில் மண்டையை உடைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை பார்த்து தடுக்க வந்த அவரது தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 
இதையடுத்து அபிஷேக், தந்தையிடம் இருந்து தப்பி, அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீஸார் விரைந்து வந்து அறைக்குள் இருந்து மாணவரை மீட்டனர். யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தி வரும் வேலையில் மாணவர்கள் தொடர்ச்சியாக ப்ளுவேலுக்கு அடிமையாகி தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.