தமிழ்நாடு

கரு‌ப்புத் திராட்சை விலை சரிவு... ஒயின் தயாரிக்க அனுப்பப்படுவதாக விவசாயிகள்‌ தகவல்

கரு‌ப்புத் திராட்சை விலை சரிவு... ஒயின் தயாரிக்க அனுப்பப்படுவதாக விவசாயிகள்‌ தகவல்

webteam

கம்பம் பகுதியில் நோய் தாக்கிய கருப்புத் திராட்சையின் விலை சரிந்துள்ளதால் ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மலிவு விலைக்கு அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள்‌ வேதனை தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம், காமயகவுண்டன்பட்டி ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக கருப்பு பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது போதிய மழை இல்லாததால் திராட்சை விளைச்சல் சற்று குறைந்தும் திராட்சையில் செவட்டை நோய், சாம்பல் நோய்கள் தாக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் திராட்சை விலையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் விவசாயத்தில் கடும் நட்டம் அடைந்துள்ளதாக திராட்சை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எக்கால கட்டத்திலும் விளையும் இந்த கருப்பு பன்னீர் திராட்சைக்கு சரியாக விலை கிடைக்காததால், அருகில் உள்ள ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அவற்றை மலிவு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் பருவ நிலையை பொறுத்தே திராட்சை விவசாயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.