சம்பா தாளடி பருவ விளைச்சல் குறைவை ஈடுகட்ட வரப்புகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் உளுந்து பயிரிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3.75 லட்சம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு மூன்று முறை பெய்த கனமழை காரணமாகவும் பருவம் தவறிய மழை காரணமாகவும் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. விவசாயிகளுக்கு ஏற்பட்ட இந்த பெரிய இழப்பை ஈடுகட்ட திருவாரூர் மாவட்ட வேளாண்துறை, விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உளுந்து விதைகளை வழங்கியது.
விவசாயிகள் அதனை தங்கள் வயல் வரப்புகளில் விதைத்தார்கள். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 8,300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. சம்பா தாளடி பருவத்தில் இழந்த வருமானத்தை இந்த உளுந்தின் மூலம் மீட்டு எடுக்க முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.