தமிழ்நாடு

“பாஜக வெல்லும்.. அதிமுகவினர் மத்திய அமைச்சர்களாவார்கள்” - ராஜேந்திர பாலாஜி

“பாஜக வெல்லும்.. அதிமுகவினர் மத்திய அமைச்சர்களாவார்கள்” - ராஜேந்திர பாலாஜி

webteam

அதிமுக சார்ந்த மத்திய ஆட்சி அமையும், அதில் அதிமுக மத்திய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளா்களை சந்தித்த அவர், “பிரதமா் மோடி இந்தியாவின் டாடியாக உள்ளாதால் அவரை கண்டு தீவிரவாதிகள் பயந்து ஓடுகிறார்கள். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் கூட்டணி முடிவு இன்று அல்லது நாளை தெரியவரும். 

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக சார்பில் மத்தியில் ஆட்சி அமையும். அதில் அதிமுக அமைச்சர்கள் பங்கு பெறுவார்கள். அதிமுக ஆல மரம். அதில் உட்காருந்து பழம் பறிக்கலாம். தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் ஒரு கூட்டணி, திமுக சார்பில் ஒரு கூட்டணி. எனவே தேர்தலில் இருமுனை போட்டிதான் நடைபெறும். தேர்தல் களத்தில் டிடிவி காணாமல் போய் விடுவார். அதிமுக கூட்டணியை உடைக்க யாருக்கும் திராணி இல்லை. சாணக்கிய தனமும் இல்லை. 7 பேர் விடுதலையில் முட்டுகட்டை போட்டு திமுகவும், காங்கிரஸும் நாடகம் ஆடி வருகின்றனர்” என தெரிவித்தார்.