தமிழ்நாடு

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை: தமிழிசை

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை: தமிழிசை

webteam

பெண் பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றும் தமிழிசை கூறியுள்ளார். நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.