தமிழ்நாடு

“இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏக்களை பெறுவோம்” - பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உறுதி

“இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏக்களை பெறுவோம்” - பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உறுதி

webteam

இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏக்களை பெறுவோம் என பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தமிழக சட்டமன்றத்தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏக்களை பெறுவோம். தமிழகத்தில் மக்கள் தரும் வரவேற்பை பார்த்தால் பாஜகவுக்கு பலம் கூடியிருப்பது தெரிகிறது. தமிழகத்திற்கு பிரதமர் அளிக்கும் முன்னுரிமை, அவரை தமிழகத்தின் உண்மை நண்பனாக மாற்றியுள்ளது” எனத் தெரிவித்தார்.