தமிழ்நாடு

களத்திற்குச் செல்லாத பாஜக வலைதளம் மூலமே செயல்படுகிறது – செந்தில் பாலாஜி விமர்சனம்

webteam

களத்திற்குச் சென்று கட்சியை வளர்க்கும் கட்சிகள் மத்தியில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் குறித்தும், களப்பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தலைமுறைக்கு அவர் அளித்த போட்டியில்... ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் நாளை காலை 10 மணிக்கு விமான நிலையம் வர உள்ளார். விமான நிலையத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்காக இந்த செயற்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றவரிடம் பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் திட்டங்கள் குறித்த கேள்வி எழுப்பிய போது கோமாளிகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டாம்' என கூறிய அவர் தொடர்ந்து... களத்திற்குச் சென்று கட்சியை வளர்க்கும் கட்சிகளுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோமாளிகளை பற்றி கேட்க வேண்டாம் என்றார்.