பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார்.
இந்நிலையில் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்குமாறு அதிமுகவிடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 தொகுதிகள் வரை பாஜக தரப்பில் கேட்கப்பட்ட நிலையில் 25 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ஷா முன்னிலையில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக பாஜக – அதிமுக இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், எத்தனை தொகுதிகள்? எந்ததெந்த தொகுதிகள் என்பதை பேசி முடிவு எடுத்துக்கொள்ள அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.