MP Kanimozhi
MP Kanimozhi pt desk
தமிழ்நாடு

”பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்” - திமுக எம்பி கனிமொழி

webteam

செய்தியாளர்: வி.சார்லஸ்

தஞ்சை மாவட்டத்தில் எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்.....

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

பிரதமர் மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு கூட சமமில்லை என்ற அண்ணாமலை பேச்சுக்கு பதில் அளித்த கனிமொழி, “இப்படிப்பட்ட பேச்சுக்கு என்ன பதில் கூறுவது, அவர் கொஞ்சம் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.