MP kanimozhi file
தமிழ்நாடு

”ஒவ்வொரு ஜாதிக்கும் அதன் பெருமைகளை கூறி பிளவுபடுத்தும் இயக்கம் பாஜக; அவர்களை..”–திமுக எம்பி. கனிமொழி

திராவிட இயக்கம் ஜாதியே இல்லை என்கிறது. ஆனால், ஒவ்வொரு ஜாதிக்கும், ஜாதிகளின் பெருமைகளை கூறி பிளவு படுத்தும் இயக்கம் பாரதிய ஜனதா கட்சி என்று கனிமொழி எம்பி பேசினார்.

webteam

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் வாகை மக்கள் இயக்கம் சார்பில் பெருந்தமிழர் பெருவிழா நடைபெற்றது. இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்...

public meeting

”மக்கள் பிரதிநிதிகளுக்கே மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் மக்களை எப்படி மதிப்பார்கள் என்று நீங்களே புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய கருத்தியல்களை நம் மீது திணித்துக் கொண்டு நம்மை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்கள். அவர்களை அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும்.

வெளியிலிருந்து இங்கு வந்து நமது அடையாளங்களை எல்லாம் அளிக்கக் கூடியவர்கள், வளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களை எந்த விதத்திலும் நாம் இந்த மண்ணிலே காலூன்ற விட்டு விடக்கூடாது என்ற உணர்வோடு நாம் செயல்பட வேண்டும். அதுதான் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அண்ணன் முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் வழங்கக்கூடிய பாராட்டாக இருக்கும்” என பேசினார்.