அண்ணாமலை, டாக்டர் ராமதாஸ், அன்புமணி
அண்ணாமலை, டாக்டர் ராமதாஸ், அன்புமணி pt web
தமிழ்நாடு

உறுதியானது பாஜக - பாமக கூட்டணி; பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்?

Angeshwar G

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் திமுக கூட்டணியில் நிறைவடைந்த நிலையில் தொகுதிப்பங்கீடும் முடிவடைந்துள்ளது. அதேசமயத்தில் பாமக அதிமுக கூட்டணியில் இணைவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது பாஜக உடனான கூட்டணியில் இணைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்ததுள்ள பாமக, 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Annamalai Ramadoss

முன்னதாக இன்று அதிகாலையில் தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது அன்புமணியிடம் பேசிய அண்ணாமலை, “மது ஒழிப்பிற்காக நீங்கள் எடுத்துவரும் முன்னெடுப்பு மிகவும் பாராட்டுக்குறியதாக இருக்கிறது. எதிர்கால சந்ததிகளை நல்வழிப்படுத்துவதற்காக நீங்கள் எடுத்துவரும் முன்னெடுப்பு எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அய்யாவின் அன்பும் ஆலோசனையும் எங்களுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய பலம்” என தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் முடிவில் தற்போது கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் தருமபுரி, அரக்கோணம், திண்டுக்கல், ஆரணி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை உட்பட 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதிகளையும் பாமகவினர் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.