தமிழ்நாடு

சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக முன்னிலை

webteam

சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். திமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் சேகர் பாவுவும், பாஜக சார்பில் வினோஜ் பி செல்வமும் களம் கண்டனர். இதில் பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம் 3,142 வாக்குகளும் பி.கே.சேகர் பாபு 1,702 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வரும் நிலையில் 10.30 மணி நிலவரப்படி துறைமுகம் தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.