பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி : பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறதே ?
பெட்ரோல் , டீசல் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது ; விலை உயர்வால் பாகவினரும் பாதிக்கப்பட்டுள்ளோம்
கேள்வி : மல்லையா , ஜெட்லி குறித்தெல்லாம் சுவாமி கருத்து தெரிவிக்கிறாரே?
சுப்ரமணியன் சுவாமி சுதந்திரமாக பேசக் கூடியவர், பாஜக அந்த சுதந்திரத்தை கொடுத்துள்ளது
கேள்வி : காங்கிரஸ் பல்வேறு விதமான விமர்சனங்களை உங்கள் மேல் வைக்கிறதே ?
யார் விமர்சனம் செய்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் ; ஆனால் காங்கிரஸ் விமர்சனம் செய்ய யோக்கியதை இல்லாத கட்சி
கேள்வி : தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் ?
பாஜக கண்டிப்பாக கூட்டணி வைத்துதான் போட்டியிடும் ; ஆனால் கூட்டணி குறித்து பேசுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை
கேள்வி : திமுக - காங்கிரஸ் உறவு பற்றி ?
காங்கிரஸ் குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்தால், எங்கே அது காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தி தேவையற்ற சிக்கலை ஏற்படுத்துமோ என திமுக அஞ்சுகிறது
கேள்வி : திமுக உடன் பாஜக கூட்டணி வைக்குமா ?
கூட்டணி வைப்பது குறித்து இப்போது திமுகவும் கற்பனை செய்யவில்லை ; பாஜகவும் கற்பனை செய்யவில்லை
கேள்வி : பெட்ரோல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா ?
இன்னும் ஒருவாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலை டம்முனு குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை