நடிகை குஷ்பு  pt
தமிழ்நாடு

குஷ்புவின் எக்ஸ் பக்கம் ஹேக்..?

தனது எக்ஸ் தளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஷ்பு

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டுள்ள குஷ்பு, "என்னுடைய எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னால் கணக்கில் உள்நுழைய(login) முடியவில்லை. கடந்த 9 மணி நேரத்தில் எக்ஸ் பக்கத்தில் நான் எந்த பதிவும் பதிவிடவில்லை.

இதைச் சரிசெய்ய முயற்சித்து வருகிறேன். எனது எக்ஸ் பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் வந்தால் தெரிவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்