தமிழ்நாடு

“இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்” - பொன்.ராதாகிருஷ்ணன்

“இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்” - பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “தமிழகத்தில் எங்கள் கூட்டணியான அதிமுக முன்னிலை பெற்றது மகிழ்ச்சி. இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் முக்கிய காரணம். உள்ளாட்சி தேர்தலில் எங்களது கூட்டணி தொடர்வது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பாஜகவை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் அதிகாரிகளையும் காட்டிக்கொடுத்தால், அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஹரியானா மாநிலத்திலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளதும் மகிழ்ச்சியானது. அந்த மாநிலங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும்” என்றார்.