பாஜக மாநில தலைவர் பதவிக்கு நேற்று விருப்ப மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, நயினார் நாகேந்திரன் மட்டுமே தாக்கல் செய்திருந்தார். தவிர, அவரைத் தலைவராகத் தேர்வு செய்ய 10 பேர் பரிந்துரைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர் பாஜக மாநிலத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் ஆனதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டில் அறிவிக்கப்பட்டது. அதில், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எல் முருகன், கே.அண்ணாமலை, எச் ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், ஆர்.சரத்குமார், சசிகலா புஷ்பா, ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், வினோத் பி.செல்வம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.