விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழு அடைப்பு மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியில் அமர திமுக பகல் கனவு காண்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயகத்தில் திமுகவிற்கு நம்பிக்கை இருந்தால், அக்கட்சி இன்னும் 4 ஆண்டுகள் பொறுமை காக்க வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.