தமிழ்நாடு

நெல்லை கண்ணன் மீது ஆளுநரிடம் பாஜக புகார்

நெல்லை கண்ணன் மீது ஆளுநரிடம் பாஜக புகார்

jagadeesh

பிரதமர் மோடியை பற்றி அவதூறாகப் பேசியப் புகாரில் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து பாஜகவினர் புகாரளித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, அக்கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் புகாரளித்தார். இது குறித்து புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திரன், “பிரதமர் மற்றும் அமித் ஷாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி இருக்கிறார். இப்படி பேசுவதற்கு தைரியம் யார் கொடுத்தார் ?

திருநெல்வேலியில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் நேற்று சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆளுநரை சந்தித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டது. விமர்சனம் செய்வது என்பது வேறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது வேறு. அவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை காவல்துறை புலனாய்வு செய்ய வேண்டும்" என்றார்.