நீதிமன்ற உத்தரவை மீறி சிவகாசியில் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்காக பிரதமர், தமிழிசை ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு உயிருடன் இருப்பவர்களது புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் வைக்கப்படும் பேனர்களில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சிவகாசியில் பல இடங்களில் பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.