மதுரை சட்டக்கல்லூரி மாணவிகள்
மதுரை சட்டக்கல்லூரி மாணவிகள் PT
தமிழ்நாடு

மதுரையில் சட்டக்கல்லூரி மாணவிகள் மீது பாஜகவினர் தாக்குதல்! என்ன நடந்தது?

PT WEB

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவிகளான நந்தினி மற்றும் நிரஞ்சனா என்ற இருவர், 'நாட்டை பற்றி சிந்திப்போம்' என்கிற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு நேற்று வழங்கி உள்ளனர். இதை கேள்விபட்ட பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள், மாணவிகள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர்.

சட்டக்கல்லூரி மாணவிகள்

அங்கு சென்ற அவர்கள், இரண்டு சட்டக் கல்லூரி மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், இரண்டு சட்டக் கல்லூரி மாணவிகளையும் கைது செய்ய முற்பட்டனர்.

அப்போது மாணவிகள், “நாட்டை பற்றி யோசிக்க சொன்னால், பாஜகவினருக்கு கோவம் தான் வரும். நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் துண்டு பிரசுரம் வழங்குகிறோம். எங்களை கைது செய்வதை ஏற்கமாட்டோம்” என்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டு மாணவிகளையும் வலுக்கட்டயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.