தமிழ்நாடு

"அரசியலமைப்பின் பொருள் தெரியாமல் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்" - அண்ணாமலை

"அரசியலமைப்பின் பொருள் தெரியாமல் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்" - அண்ணாமலை

Sinekadhara

இந்திய அரசியலமைப்பின் பொருள் தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கமாக கொண்டுள்ளதாக விமர்சித்தார். மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் பொருள் தெரியாமல், மேற்கு வங்க ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.