தருமபுரி ரமாக்காள் ஏரி தருமபுரி-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் 265 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் 90 ஹெக்டேர் பரப்பளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இந்த ஏரியின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்பாசன வசதி பெறுகின்றனர். மேலும் தருமபுரி நகர் உள்ளிட்ட 15-க்கும் ஏற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் பருவ மழை காலத்தின் தொடக்கத்தில் அரிய வகை வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்ய வந்து செல்வது வழக்கம். இதனால், ஏரியின் நடுவே சரணாலயம் போன்று திட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் ராமாக்காள் ஏரியை பார்ப்போருக்கு வேடந்தாங்களை நினைவுப்படுத்தும் விதமாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு சரியான அளவில் பருவ மழை பொழியாததால், தருமபுரி ராமாக்காள் ஏரி வறண்டு காணப்பட்டது.
தற்பொழுது தேன்மேற்கு பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால், ராமாக்கள் ஏரியில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் ராமாக்காள் ஏரிக்கு மஞ்சள் மூக்கு நாரை, சின்ன கொக்கு, சிறிய பச்சி கொக்கு, கருப்பு மூக்கு நார, செங்கல் நாரை, நத்தை கூடை நாரை, நீர்கோழி மற்றும் புதிய வகை நீர்கோழிகாள், ஆஸ்திரேலிய நாட்டு பறவையான நீள வால் இலைகோழி பறவை உள்ளிட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இது பார்ப்பதற்கு குட்டி வேடந்தாங்கல் போலுள்ளது என பார்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். தருமபுரி நகர மக்கள் மட்டுமல்லாது பல ஊர்களில் இருந்தும் வந்து இந்த பறவைகளின் அழகை மக்கள் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்
தகவல்கள் : விவேகானந்தன், செய்தியாளர், தருமபுரி.