தமிழ்நாடு

கன்னியாகுமரி: காயத்தில் இருந்து மீண்ட அரிய வகை சினேரியஸ் கழுகை விடுவிக்க கோரிக்கை

JustinDurai
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்லுயிரின பூங்காவில் 4 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் அரிய வகை சினேரியஸ் கழுகை விடுவிக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒக்கி புயலின்போது திசை மாறி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காயமடைந்து விழுந்த அரிய வகை சினேரியஸ் கழுகு, உதயகிரி கோட்டையில் உள்ள பல்லுயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒகி என பெயரிடப்பட்ட இந்த கழுகு குணமடைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கூண்டில் இருந்து அதை விடுவிக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத்தில் இருந்து திசை மாறி வந்த இந்தப் பறவையை மீண்டும் அம்மாநிலத்திலேயே கொண்டு விட வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.