தமிழ்நாடு

“மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம்” - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

“மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம்” - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

webteam

பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5 மடங்கு டெங்கு பாதிப்பு குறைவு. ஹோட்டல் ஊழியர்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சோதனை செய்ததில் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.