சென்னை அம்பேத்கர் சட்டப்பல்லைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்கிறார்.
முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி செய்யும் மசோதா கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.
சமீபத்திய செய்தி: `கையூட்டு தராததால் எங்களை கைது செஞ்சாங்க...’ வைரல் வீடியோவுக்கு பதிலளித்த காவல்துறை
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பதில் தரவுள்ளனர். இது தவிர சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.