தமிழ்நாடு

சென்னை: ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த பைக் - போலீசார் விசாரணை

சென்னை: ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த பைக் - போலீசார் விசாரணை

Sinekadhara

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை அடையாறில் இருந்து வளசரவாக்கம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஈக்காட்டுத்தாங்கல் - காசி தியேட்டர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய பைக் திடீரென சூடாகி இருக்கிறது. போக்குவரத்து நெரிசலால் பாலத்திலேயே ஓரமாக நிறுத்தி பார்த்தபோது திடீரென பைக்கிலிருந்து கரும்புகை வெளியேறியது. உடனே பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வாகனங்களில் சென்றவர்கள் இதனை வேடிக்கை பார்த்ததால் அந்தப் பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது.

தகவலறிந்த கிண்டி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலான போக்குவரத்து நெரிசலை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.