தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸ்?: இருவர் படுகாயம்

சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸ்?: இருவர் படுகாயம்

Rasus

சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் எப்போதுமே அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் நெரிசல் மிகுந்த பகுதியாகவே காணப்படும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சாலையில் கிடந்தனர். உடனடியாக அங்கே திரண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஸ்பென்சர் பிளாசா எதிரே உள்ள சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதிதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனிடையே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்திலேயே, பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் இருவரும் பைக் ரேஸில் ஈடுபட்டதாகவும், அதனால்தான் விபத்து நேரிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.