தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி

webteam

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து நேற்று 342 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 886 கனஅடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நீலகிரி மாவட்டத்திலுள்ள நீர்மின் அணைகள் மின் உற்பத்திக்காக நீர் திறப்பு அதிகரிக்கும் போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தனர். 

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.03 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 5.2 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.