சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனின் தொகுதியான பவானியில், வாக்காளர்கள் தேர்தல் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர்.
ஜம்பை, நெருஞ்சிப்பேட்டை, ஒலகடம், சலங்கைபாளையம், அம்மாப்பேட்டை மற்றும் ஆப்பக்கூடல் என 6 பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்த பவானி தொகுதியில் மொத்தம் 2,23,051 வாக்காளர்கள் உள்ளனர்.
கைத்தறியும், விவசாயமும் பிரதானமாக நடக்கிற இந்தத் தொகுதியில், விசைத்தறியால் ஜமுக்காளத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்மிதிகளை கோ ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யவேண்டும் எனவும், நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டும் எனவும், விளைப்பொருட்களுக்கு குளிர்பதனக்கிடங்கு அமைத்து தரவேண்டும் எனவும் பல கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.