தேர்வுகள் ஒத்திவைப்பு PT
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை.. பாரதிதாசன், அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெறவிருந்த பருவத்தேர்வுகளை திருச்சி பாரதிதாசன் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்துள்ளன.

Rishan Vengai

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை நவம்பர் 27-ம் தேதியன்று புயலாக உருமாற வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன், அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 27-ஆம் தேதியான புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் நாளை நடைபெறவிருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.