தமிழ்நாடு

"உஷாராக இருங்கள்"-லோன் ஆப் குறித்து காவல்துறை எச்சரிக்கை!

"உஷாராக இருங்கள்"-லோன் ஆப் குறித்து காவல்துறை எச்சரிக்கை!

jagadeesh

உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பும் செல்போன் ஆப்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்போன் ஆப்கள் சில, உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்களை அனுப்புகின்றன. அதை நம்பி சிறிய தொகைதானே என்று கடன் வாங்க நினைக்கும், நபர்களுக்கு உதாரணமாக ரூ.5000 கடன் தொகை கேட்டால், கடன் அளிக்க செயல்பாட்டுக் கட்டணம் என்று ரூ.1,500 பிடித்தம் செய்து வெறும் ரூ.3500 வரவு வைக்கப்படுகிறது.

அதனை திரும்ப செலுத்த தாமதமாகும் பட்சத்தில், வட்டி, வட்டிக்கு வட்டி என்று கடன் வாங்கியவரை செயலிகள் மிரட்டத் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல, கடன் வாங்கியவரின் செல்போன் இருக்கும் தொடர்பு எண்களையும் தொடர்பு கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, செல்போன் ஆப்களிடம் கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.

உடனடி லோன் தருவதாக கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள்..,போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "உடனடி லோன் தருவதாகக் கூறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் போலி மொபைல் போன் அப்ளிகேஷன்கள், போலி மொபைல் போன் லோன் அப்ளிகேஷன்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.