பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அய்யலூர் ஆட்டு சந்தையில் 1 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றிருப்பதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வாரச்சந்தையில் இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகள் வாங்குவதற்காக கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். இதனால் அங்கு ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 4 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது. இன்று மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.