தமிழ்நாடு

போராட்டத்தில் பங்கேற்காத மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி டிஜிபிக்கு கடிதம்

போராட்டத்தில் பங்கேற்காத மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி டிஜிபிக்கு கடிதம்

webteam

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள், நோயாளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக டி.ஜி.பிக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா‌ ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ஆவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களிடம் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடாமல் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக டி.ஜி.பி திரிபாதிக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா‌ ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். வேலை நிறுத்தத்தை திரும்ப பெறுவதாக பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்டுவிட்டு போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.