சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர் என்பதால்தான் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது, காரில் அதிமுக கொடியை பொருத்த சசிகலாவுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்
சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிடிவி.தினகரன் “சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் என்பதால்தான் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்தான், சட்டப்போராட்டம் தொடரும். காரில் அதிமுக கொடியை பொருத்த சசிகலாவுக்கு எல்லா உரிமையும் உண்டு, இதில் எந்த சர்ச்சையும் இல்லை.
அதிமுகவை ஜனநாயகமுறையில் மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அமமுகவை ஆரம்பித்ததே ஜனநாயகமுறையில் தேர்தலில் வென்று அதிமுகவை மீட்டெடுக்கத்தான். மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்னும் ஒருவாரம் பெங்களூரில் தங்குவார், அதன்பிறகு தமிழகம் திரும்புவார்” என தெரிவித்தார்
கடந்த 11 நாட்களாக கொரொனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், இன்னும் ஒருவாரம் பெங்களூரு புறநகர் பகுதியில் தங்கி ஓய்வெடுப்பார் என்று தினகரன் தெரிவித்தார்