நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பகல் நேரத்திலேயே கரடிகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அரவேனு பகுதியில் கரடி ஒன்று வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.