Hemachandran
Hemachandran pt desk
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் - இன்னும் எவ்வளவு நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு? தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்

Kaleel Rahman

மிக்ஜாம் புயல் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் நம்மோடு பேசுகையில், "நேற்றிரவு முதல் மிக்ஜாம் புயல் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மெதுவாக மேற்கு, வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகியுள்ளது.

chennai rain

சென்னையில், அதிகபட்சமாக பெருங்குடியில் 24 செமீ மழையும், மாமல்லபுரத்தில் 22 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய 8 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்கும். அதேபோல் முற்பகல் முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த புயலின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அடர்ந்த மேகக் குவியல்கள் உருவாகி வருகிறது. இதனால் முற்பகல் 10 மணிக்குப் பிறகு மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக் கூடும். அதேபோல் இன்று மாலை வரை தொடர்மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறுகிய காலத்தில் அதீத மழைப்பொழிவு இருக்கும் என்பதால் அடுத்த 8 மணி நேரத்திற்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது" என தெரிவித்தார்.

இன்று இரவு வரை அதீத கனமழை இருக்கும் என்று தனியார் வானிலை மைய ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.