தமிழ்நாடு

பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

webteam

பி.இ., பிடெக். படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவ-மாணவிகளுக்கான ரேண்டம் எண், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி செயலாளர் மங்கத்ராம் சர்மா மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மாணவர்கள் தங்களுக்கான ரேண்டம் எண்ணை, www.tneaonline.in என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். ஒரே கட் ஆஃப் கொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்களை தரவரிசைப்படுத்தவே ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. வரும் 6 ஆம் தேதி முதல் 11 தேதி வரை நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகே தகுதியுள்ள மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 

மேலும் 15 கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விருப்பமில்லை என தெரிவித்ததால் இந்த வருடத்திற்காக காலியிடங்களில் அக்கல்லூரிகள் இடம்பெறவில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.