பசன கௌடா, எடியூரப்பா
பசன கௌடா, எடியூரப்பா pt web
தமிழ்நாடு

”கொரோனா காலத்தில் எடியூரப்பா 40 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தார்” - பாஜக மூத்த தலைவர் குற்றச்சாட்டு

PT WEB

கொரோனா காலத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாட்டீல் தெரிவித்த நிலையில், அதுதொடர்பான ஆவணங்களை வழங்க அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், பிஜப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பசனகவுடா பாட்டீல் ((BasanaGowda)) தெரிவித்துள்ள குற்றச்சாட்டில், கொரோனா காலத்தில் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, 48 ரூபாய் மதிப்புள்ள முகக்கவசம் ஒன்றை 485 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் எடியூரப்பா தலைமையிலான முந்தைய பாஜக ஆட்சியில், கோவிட் நோயாளிகளிடம் அதிகளவு பணம் வசூலித்ததாக புகார் தெரிவித்துள்ளார். 40 ஆயிரம் கோடி அளவுக்கு எடியூரப்பா ஊழலில் ஈடுபட்டதாகவும் பசனகவுடா குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் இத்தகைய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, முந்தைய பாஜக அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததற்கான ஆவணங்களை, கொரோனா தொடர்பான முறைகேடுகளை விசாரிக்கும் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தியுள்ளார்.