தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து

டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து

webteam

டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைக்க உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது. பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட இரு ஒப்பந்தங்களில் அதிக விலை நிர்‌ணயிக்கப்பட்‌டதாகவும், டாஸ்மாக் விற்பனைக்கு ஏற்ப ஒப்பந்த விலையை நிர்ணயிக்க வேண்டுமெனவும் பார் உரிமையாளர்கள் தங்களது மனுவில் கோரியிருந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், டாஸ்மாக் பார் உரிமம் வழங்கும் முன், கடையின் வருமானத்தைப் பொருத்து விலை நிர்ணயிக்க விதிமுறை உருவாக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015 அக்டோபர‌ 27ம் தேதி உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். அதை மீறும் வகையில் தற்போது கோரப்பட்டுள்ள புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புகளை ரத்து செய்வதாகவும், புதிய விதிமுறைகளோடு புதிய விலையோடு 4 வாரங்களுக்குள் ஒப்பந்தப்புள்ளி வெளியிட வேண்டுமென்றும் கூறி உத்தரவிட்டார்.