தமிழ்நாடு

மாநில அரசின் உரிமைகள் மீறப்பட்டால் கடுமையாக எதிர்ப்போம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை

JustinDurai

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்காத வகையில் சட்டமுன் வடிவு கொண்டு வரப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உரிமைகளை மீறினால் கடுமையாக எதிர்ப்போம் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரை முழுவதிலும் மத்திய அரசினை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசினார். ஒன்றிய அரசை குறிப்பிட்ட ஆளுநர் உரையின் அம்சங்கள்

மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால், அரசியலமைப்பின் துணையோடு அதை கடுமையாக எதிர்ப்போம் என்று கூறிய ஆளுநர், உறவுக்கு கைக்கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவை பேணுவோம் என்றார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும், சட்டத்திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.