தமிழ்நாடு

வாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி 

வாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி 

webteam

திருவாரூரில்‌ கடன் பெறாமலேயே, 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் ‌வாங்கியதாக வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்ததால், விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார். 

திருவாரூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது ஸ்டேட் பேங்க் வங்கிக் க‌ணக்கிலிருந்து 4 ஆயிரத்து 600 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.‌ பாண்டியனுக்கு விளமல்‌ கிளை ஸ்டேட் வங்கியில் கணக்கே‌ இல்லாத நிலையில்‌, அங்கு 3 லட்சத்து ‌‌‌90ஆயிரம் ரூபாய்‌ கடன் பெற்றிருப்பதாகவும், ‌‌கடனை‌ செலுத்தாததால் ‌ 2‌ சதவிகிதம் வட்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் நோட்டீஸ் வந்துள்ளது. 

இத‌னைப்பார்த்து அதிர்ச்சி‌ அடைந்த பாண்டியன், விள‌மல் கி‌ளை‌ வங்கியில் கடன் பெறாத நிலையில்,‌ மற்றொரு கிளையில் வைத்துள்ள வங்கிக்கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்துள்ளதாக , புகார்‌ தெரிவித்துள்ளார்.‌ இதுகுறித்து வங்கியில் சென்று விசாரித்தபோது, கடன் வாங்கிவிட்டு பணத்தை செலுத்தவில்லையென்றால்,‌ இதுபோன்று தான் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலட்சி‌யமாக பதில் அளித்துள்ளனர். 

மனமுடைந்த பாண்டியன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்பிஐ மற்றும் வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.