தமிழ்நாடு

துப்பட்டாவில் 13 கிலோ தங்கம் கடத்திய பெண்!

துப்பட்டாவில் 13 கிலோ தங்கம் கடத்திய பெண்!

webteam

துபாயில் இருந்து தங்கத்தை துப்பட்டாவில் மறைத்து வைத்து கடத்தி வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவசரமாக வெளியேற முயன்ற பெண்ணை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அவரது பதிலில் திருப்தி ஏற்படாததால் பெண் அதிகாரி மூலம் அந்தப் பெண்ணிடம் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த பெண் தனது இடுப்பில் கட்டியிருந்த துப்பட்டா வழக்கத்துக்கு மாறாக கனமாக இருந்ததைக் கண்ட பெண் அதிகாரி, அதில் 25 தங்கச் சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார். 

அந்தப்பெண்ணிடன் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கச்சங்கிலிகளின் மொத்த எடை 13 கிலோ என்றும், அதன் மதிப்பு 4 கோடி ரூபாய் இருக்கும் என  அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். தங்கம் கடத்தி வந்த பெண் கர்நாடகாவின் சிக்மகளூரைச் சேர்ந்த 52 வயதாகும் பத்மா அம்பலே வெங்கடராமைய்யா என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.