தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக அருவிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், மெயினருவியில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர். இதனால் மற்ற அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குற்றாலத்தில் மழை சாரலும், பனிக்காற்றும் ஒருசேர வீசுவதால் இதமான சூழல் நிலவி வருகிறது.