குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க அவ்வவ்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக அருவிகளில் குளிக்கத்தடை விதிப்பதும், வெள்ளப்பெருக்கு குறையும் நேரத்தில் அனுமதி அளிக்கப்படுவதுமாக தொடர்கிறது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மீண்டும் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றால மெயின் அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.